Total Pageviews

Wednesday, March 9, 2011

Essential Service -- Evolution

Essential Service--இன்றியமையாப் பணிகள்

Essential Supplies--இன்றியமையாப் பொருள்கள்

Establishment--பணியாளர் தொகுதி; நிறுவனம்; நிறுவுதல்

Establishment charges--பணியாளர் தொகுதிச் செலவினம்

Establishment list--பணியாளர் தொகுதிப் பட்டியல்

Establishment Service--பணியமைப்பு ஊழியம்; பணியமைப்புப் பணி

Estate--உடைமை; தோட்டம்

Estate Duty--இறப்பு வரி

Estate Land Act--சமீன் நிலச் சட்டம்

Estate Manager--சமீன் சொத்து மேலாளர்

Esteemed--மதிப்பிற்குரிய

Estimate--மதிப்பீடு

Estimated Expenditure--மதிப்பிட்ட செலவினம்

Estuary--கழிமுகம்

Etcetera (etc)--முதலியன; இன்ன பிற;

Ethics--ஒழுக்கவியல்

Ethnography--மக்கள் இன அமைப்பியல்

Ethnology--மக்கள் இன விளக்க நூல்

Etiquette--நடத்தை முறை; ஒழுங்கு முறை

Etymology--சொற்பிறப்பியல்

Evacuate--வெளியேறு; வெளியேற்று; வெறுமையாக்கு

Evacuee Property--வெளியேற்றப்பட்டவர் சொத்து

Evacuees--வெளியேற்றப்பட்டவர்; நாடிலி; வீடிலி

Evade--தவிர்; நழுவு; மழுப்பு

 Evaluation--கணிப்பாய்வு; மதிப்பாய்வு

Evaporation--ஆவியாதல்

Evasion--ஏய்ப்பு; தட்டிக்கழிப்பு; நழுவுதல்

Evasion of Tax--வரி ஏய்ப்பு

Evasive Answer--மழுப்பலான விடை

Event--நிகழ்ச்சி; விளைவு

Eventuality--நேர்வு; பின்வருநிலை

Everlasting--எக்காலத்தும் உள்ள

Eviction--வெளியேற்றல்

Evidence --சான்று; சான்று பகர்; எண்பி

Evident --தெளிவான; ஐயமற்ற

Evoke--வெளிவரச் செய்

Evolution--உள்ளது சிறத்தல்

 

 

 

 

3 comments:

  1. சமீன் என்பது தமிழ் சொல்லா?

    ReplyDelete
  2. முதன்முதலாக் இந்த வலைப்பூவில் பயன்மிக விவாதத்தைத் தொடங்கியுள்ள தமிழன்பன் அவர்களுக்கு நன்றி.'சமீன்'உருதுச் சொல்தான்.வெள்ளையர் ஆட்சியில் நிலங்களை வைத்திருந்த இந்தைய நிலக்கிழார்கள் நிலப்பரப்பின் அள்வுக்கு ஏற்ப மிட்டாதார்,மிராசுதார்,சமீந்தார் என்று வகைப்படுத்தப்பட்டனர்.பெருநிலக்கிழார்(சில சிற்றூர்களுக்கு உரிமையாளராக இருந்தனர்.நிலவரியைக் குடிகளிடமிருந்து பெற்று பிரிட்டிசு அரசுக்கு வழங்குவது இவர்தம் கடமை.
    இவர்களின் நிலங்கள் நட்டுடைமை ஆக்கப்பட்டன.உச்சவரம்புச் சட்டத்திற்கு சிலர் தப்பித்தனர் என விரித்து வரலாறு கூற விரும்பவில்லை.இதனைத் தமிழ்ப்படுத்த யாஉம் முனையவில்லை.ஏனெனில் இன்று சமீன் வழக்கம் கிடையாது.எனினும் நீங்கள் தொடுத்த வினா ஆட்சிச்சொல் தூய தமிழில் அமைதல் வேண்டும் எனும் உயரிய குறிக்கோளைக் கொண்டுள்ளது.எனவே குழுக் கூட்டத்தில் இந்தச் சொலுக்கு மாற்றாகச் சில சொற்களை முன்மொழிய விரும்புகிறேன்.
    'சமீன் நிலச் சட்டம்'-பண்ணைநிலச் சட்டம் எனவும்
    'சமீன் சொத்து மேலாளர்' பண்ணைச் சொத்து மேலாளர் எனவும் மாற்றலாமா எனவும் கேட்கவிழைகிறேன்.தாங்கள் வேறு சொல்லாக்கங்களை முன்மொழியவிழைந்தாலும் கூறலாம்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,
    உங்களது அளவிற்கு எனக்குத் தமிழ் பாண்டித்தியம் இல்லை.
    சமீன் என்பது தமிழ் அல்ல என்பது மாதிரி எனது சிற்றறிவிற்கு தோன்றியது.

    Estate என்பதற்கு வித்தியாசமான அர்த்தங்கள் அது சொல்லப்படும் இடத்தைப் பொறுத்து இருக்கின்றது.

    நீங்கள் கூறியபடி, Estate land act என்பதற்கு 'நில உடைமைச் சட்டம்' என்றும்
    Estate Manager என்பதற்கு 'பண்ணை மேலாளர்' என்றும் கூறலாம் என்று நினைக்கிறேன்.

    பிழையென்றால் தயவு செய்து சுட்டிக் காட்டித் திருத்துங்கள்.

    ReplyDelete