Total Pageviews

Wednesday, March 16, 2011

வணிகர்கள் பயன்படுத்துவதற்கான சொற்பட்டி-2

Auditorium   முதலாக Brick-field வரையிலான ஆங்கிலச் சொற்களுக்கு

38. Auditorium -                  கலையரங்கம்

39. Audio Cassette -           ஒலிப்பேழை, ஒலிநாடா

40. Audio Centre -              கேட்பொலியகம், கேட்பொலி நடுவம், ஒலியகம், ஒலிநாடா மையம்

41. Auto Lining -                 தானி-வரிப்பீடு

42. Automatic Watch -        தன்னியக்க மணிப்பொறி, தானியக்கக் கடிகாரம்

43. Automobiles -               தானியங்கிகள், தானியங்கிகள் வினையகம்

44. Autorickshaw -              தானியங்கிழுவை, தானி, தானியங்கி

45. Auto-Service -               தானிப் பணியகம்

46. Auto Spare Industries -  தானி உதிரியுறுப்புகள் தொழிலகம், தானி உதிரிப்பொருள்கள் தொழிலகம்

47. Auto Spare Parts -        தானி உதிரியுறுப்புகள், உதிரிப்பொருட்கள், தானியுதிரிப் பாகங்கள்

48. Auto-wings -                 தானி-சிறகம்

49. Avenue -                       நிழற்சாலை, கவின்பாதை, மரம் பயில் சாலை, அகல் கவின்பாதை

50. Bakers & Confectioners -              அடுமனைஞர் மற்றும் தின்பண்டங்கள்; வறட்டப்பங்களும் தின்பண்டங்களும் செய்பவர்

51. Bakery -                       அடுமனை

52. Bamboo Mart -              மூங்கிலங்காடி, மூங்கில் கடை

53. Bankers -                     வைப்பகர், வங்கிப் பொருளகர், நிதியர், வட்டிக்கடைக்காரர்

54. Bar -                            அருந்தகம், மதுக்கூடம், மது அருந்தகம், வழக்குரைஞர் குழாம்

55. Bargain -                      விலைப் பேச்சு/பேரம்

56. Bar Soap -                    பாரை வழலை, நீள் வழலை, நீள் சலவைக்கட்டி, நீள் சவர்க்காரம், நீள் சவர்க்காரக் கட்டி

57. Battery Service -           மின்கலப் பணியகம்

58. Bazaar -                       அங்காடி, கடைத்தெரு, கடைவீதி

59. Beacon Light -              வழிகாட்டும் ஒளி

60. Beauty Parlour -            அழகூட்டு நிலையம், எழில் புனையகம், ஒப்பனை மனை

61. Beavery -                      விலங்குகள் வளர்ப்பிடம்

62. Bedding Mart -              படுக்கை அங்காடி; படுக்கைப் பொருள்கள் விற்பனையகம்/அங்காடி

63. Beeda Stall -                வெற்றிலைப் பாக்கு சுருள் நிலையம், மடி வெற்றிலைக் கடை, அடைகாய்க் கடை

64. Beef -                           மாட்டிறைச்சி

65. Beef Brewis -                மாட்டிறைச்சி வடிசாறு

66. Benefit Fund -               நல நிதி, நலக் குவை, நல நிதியம்

67. Bhavan -                       நிலையம்

68. Binder -                        கட்டகர், நூற்கட்டுநர்

69. Binding Works -            கட்டடப் பணியகம், நூற் கட்டடம்,பொத்தகக் கட்டுப் பணியகம்

70. Biscuits -                     ஈரட்டிகள் (உரொட்டிகள்), மாச்சில்லுகள்

71. Block Makers -             அச்சுரு வினைஞரகம், படக்கட்டை செய்பவர், படக்கட்டைத் தொழிலர், அச்சுருப் பணியகம்.

72. Blue Metals -                கருங்கல் நீல மாழைகள், நீல மாழைக்கற்கள், நீலப் பொன்மங்கள், நீல மாழைக் கல்லகம், கருங்கல் சரளை

73. Boarding & Lodging -     உண்டுறை விடுதி, உணவு உறையுள் விடுதி, உண்டுறையகம்

74. Body-builders (vehicles) -              ஊர்தி உடலங் கட்டுநர், ஊர்தி மேற்கூடு கட்டுநர், ஊர்திக் கட்டுமானம்

75. Boiler -                         கொதிகலன்

76. Boots -                         புதை மிதியடி/மூடு காலணி

77. Bore-well Services -       ஆழ்துளைக் கிணறு பணியகம்

78. Breweries -                   வடிப்பகம், வடிசாலை

79. Brickfield -                    செங்கற் சூளை, காளவாய், காளவாசல்

 

No comments:

Post a Comment