Total Pageviews

Thursday, March 10, 2011

Ibid --- Incalculable .

Ibid ..   அதே நூலில்; அதே நூற்பகுதியில்

Ice ..    பனிக்கட்டி

I.D.D.P. மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம்

Idea .. கருத்து; எண்ணம்

Ideal . சீர்மை; உயர் குறிக்கோள்; கருத்தியலான; புனைவியலான

Idea less .. எண்ணமற்ற; நோக்கமற்ற

Ideology .. கருத்தியல்; கொள்கை

Identical .. ஒரே மாதிரியான; ஒத்த

Identical Post .. ஒத்தநிலைப் பணியிடம்

Identical scale of pay .. ஒத்த சம்பள ஏற்றமுறை

Identification Card ..     அடையாள அட்டை

Identity card     அடையாள அட்டை

Identification certificate .. அடையாளச் சான்றிதழ்

Identification Marks .. அடையாளக் குறி

Identification Parade .. அடையாளம்காண் அணிவகுப்பு

Identification Slip .. அடையாளச் சீட்டு

Identify .. குறித்துக் காட்டு; அடையாளம் காண்

Identity .. அடையாளம்; தனித்துவம்

Idiom .. மொழி மரபு; மொழி வழக்கு

Idol .. வழிபாட்டு உரு

 Ignorance .. அறியாமை; மடமை

Ignore .. புறக்கணி

Illegal .. சட்டமுரணான; சட்டப்புறம்பான

Illegitimate .. சட்ட இசைவற்ற; முறைகேடான

Illicit .. கள்ளத்தனமான; சட்டவிலக்கான

Illicit liquor .. கள்ளச் சாராயம்

Illiteracy .. கல்லாமை

Illiterate .. கல்லாத; கல்வி அறிவற்ற; தற்குறி

Illness .. நோய்; பிணி

Illumination ..    ஒளி விளக்கம்

Ill-treat .. சீர்கேடாய் நடத்து; கொடுமைப்படுத்து

Illusion .. மாயை; பொய்த்தோற்றம்; மருட்சி

Illustration .. விளக்கம்; எடுத்துக்காட்டு

Illustrious .. புகழ்பெற்ற; சிறப்பு வாய்ந்த

Illwill .. தீய எண்ணம்; பகைமை

Image .. உருவம்; படிமம்; உரு

Imagination .. கற்பனை

Imbalance .. சமமின்மை

Imbibe .. உள்ளீர்த்துக்கொள்; மனதிற்கொள்

Imitation .. போலி

Immature .. பக்குவப்படாத; முதிராத

Immeasurable .. மிகப் பெரிய; அளவிடற்கரிய;

Immediate .. உடனடியான; அடுத்த; நேரடியான

Immense .. மிகப் பெரிய; மிகப் பரந்த

Immerse .. அமிழ்த்து; மூழ்கடி

Immigration Act .. குடிபுகு சட்டம்

Immigration into India .. இந்தியாவில் குடிபுகுதல்

Imminent .. உடனடியாக நிகழக்கூடிய; நெருங்கிவர உள்ள

Immolation .. பலியாக உயிர் துறத்தல்; தீக்குளிப்பு

immoral .. தீய ஒழுக்கமுள்ள; ஒழுக்கமற்ற

Immoral Traffic .. பரத்தமைத் தொழில்

Immortal .. அழியாத; இறப்பற்ற

Immovable Property .. இடம்பெயராச் சொத்து

 Immunity .. சட்ட விலக்களிப்பு; நோய்த் தடைக் காப்பு

Immutable .. மாற்ற முடியாத; நிலையான

Impair .. அழி; பழுதாகச் செய்

Impact .. பயன்; செயல்விளைவு

Impart .. தெரிவி; பங்களி

Impartiality .. ஒருபாற் கோடாமை

Impartible Estate .. பிரிக்க முடியா உடைமை

Impasse .. இக்கட்டு; தப்பலாகா நிலை

Impassive .. கிளர்ச்சியற்ற; உணர்ச்சித்திறக் குறைவான

Impatient .. பதற்றமான; மன அமைதியற்ற

Impeachment .. அரசியல் குற்றச்சாட்டு

Impediment .. தடை; இடர்ப்பாடு

Imperative .. கட்டாயமான; அதிகாரமான; தவிர்க்க முடியாத

Imperfect .. குறைபாடான; நிறைவுறாத; குற்றமுள்ள

Imperial .. பேரரசு; பேரரசுக்குரிய; மாட்சிமை மிக்க

Imperialism ..    பேரரசு ஆட்சிமுறை; ஏகாதிபத்தியக் கொள்கை

Impersonation .. ஆள் மாறாட்டம்

Impertinent .. தகாத; முறைகெட்ட; துடுக்குத்தனமிக்க

Impervious .. ஊடுருவமுடியாத

Impetus .. தூண்டுதல்; மனக்கிளர்ச்சி; உந்து வேகம்

Implantation .. ஊன்றுதல்

Implementation .. செயற்படுத்தல்

Implements .. துணைக் கருவிகள்

Implicate .. சிக்க வை; பாதுகாக்கச் செய்

Implicit Obedience .. ஐயுறாப் பணிவுடைமை

Implore .. மன்றாடு; கெஞ்சிக் கேள்

Imply .. குறிப்பாகச் சுட்டு

Impolite .. நடைநயமற்ற; மரியாதையற்ற

Import .. இறக்குமதி; உட்பொருள்; உட்கருத்து

Import Duty ..   இறக்குமதித் தீர்வை

Important .. முக்கியமான

Important File .. முக்கியக் கோப்பு

Impose .. சுமத்து; விதி; பொறுத்தி அமை

Impossible .. இயலாத

Imposition .. விதித்தல்; தண்டனை; எழுத்து வேலை

Impotent .. ஆண்மையற்ற; ஆற்றலற்ற

Impound .. பட்டியில் அடை; சிறைப்படுத்து; பிடித்து வை; பற்றி வை;

Impracticable .. செயல்படுத்த இயலாத; செய்ய முடியாத

Impression .. முத்திரை; பொறிப்பு; கருத்துப் பதிவு; பதிப்பு

Impressive .. மனக் கிளர்ச்சி உண்டாக்குகிற; கவர்ச்சி ஊட்டுகிற; உள்ளத்தில் பதியத்தக்க

Imprest .. அலுவல் முன்பணம்; பணி முன் பணம்

Imprest Advance. . .அலுவல் முன்பணம்; பணி முன் பணம்

Imprint .. பெயர் விவரக் குறிப்பு

Imprisonment .. சிறைப்படுத்தல்

Improbable .. பொருத்தமற்ற; நம்புதற்கரிய; நிகழ்தற்கரிய

Impromptu .. முன்னேற்பாடற்ற; முன் முயற்சியற்ற

Improper .. ஒழுங்கில்லாத; தவறான

Improper Admission .. தவறான சேர்ப்பு

Improved Agricultural Practice .. செம்மைப்படுத்தப்பட்ட வேளாண்நடைமுறை

Improved Agricultural Implement .. செம்மைப்படுத்தப்பட்ட வேளாண் கருவி

Improvement .. மேம்பாடு; முன்னேற்றம்; வளர்ச்சி;செம்மை

Impugned Order .. குறை கூறப்பட்ட ஆணை; மறுத்துரைக்கப்பட்ட ஆணை

Inability .. இயலாமை

In Absentia .. நேரில் வராமல்

Inaccessible ..புகமுடியாத; அணுகமுடியாத; எட்டாத

In Accordance with Rule .. விதிப்படி; விதிக்கிணங்க

Inaccuracy .. சரியின்மை

Inaction .. செயலின்மை

Inadequate .. போதாத; பற்றாத

Inadmissible ..அனுமதிக்கத்தகாத

Inadvertent .. கவனக் குறைவுடைய; கவனமற்ற; விழிப்பற்ற

Inalienable .. மாற்றிக் கொடுக்க இயலாத

In alterable .. மாற்ற முடியாத

In any event .. எது நேர்ந்தாலும்

Inapplicable .. பொருந்தாத

Inasmuch .. என்ற காரணத்தினால்

Inaugural Address .. தொடக்க உரை

Inaugurate .. தொடங்கி வை

Inauspicious .. மங்கலமற்ற; தீயதான

In brief .. சுருக்கமாக

Incalculable .. கணித்தற்கரிய

No comments:

Post a Comment