Total Pageviews

Wednesday, March 16, 2011

வணிகர்கள் பயன்படுத்துவதற்கான சொற்பட்டியல்

Accountant    முதல்   Auditor  வரையான ஆங்கிலச் சொற்களுக்கு

1. Accountant -                  கணக்கர், கணக்காளர்

2. Accountant-General -      கணக்காளுகைத் தலைவர்

3. Acknowledgement -        பெறுகை ஒப்பம், ஒப்புரை, பெறுகைச் சீட்டு, ஏற்றுக்கோடல்

4. Acid -                            அமிலம், காடிப்பொருள்

5. Acquisition -                   கைப்படுத்துகை, கையகப்படுத்தல்

6. Additional -                     கூடுதல்

7. Adhesives -                    பசைமங்கள், ஒட்டிகள், பசைகள்

8. Adhesives stamp -          ஒட்டு வில்லை, பசை வில்லை, ஒட்டு முத்திரை

9. Advertisers -                   விளம்பர வினைஞர், விளம்பரதாரர்

10. Agarbathies -                அகில் மணக்குச்சிகள், ஊதுவத்திகள்

11. Agency -                      முகவாண்மை, முகவர்கள், முகமை,முகவாண்மையகம், முகவரமைப்பு

12. Agent -                         முகவர்

13. Agent Organisation -     முகவரமைப்பு

14. Agro Centre -                வேளாண்மை நடுவம், வேளாண் மையம்

15. Agro Industries -           வேளாண் தொழிலகங்கள், வேளாண்தொழில்கள்

16. Agro Service -               உழவுப் பணி, வேளாண்மைப் பணி

17. Agro Service Centre -    வேளாண்மைப் பணி மையம், வேளாண் பணி நடுவம்

18. Air-Conditioner -            வளிச்சீர்மை, காற்பதனி, குளிர்பதனி,சீர்வளி

19. Air Pillow -                    வளியணை, காற்றுத் தலையணை

20. Air Port -                      வான்திடல், வானூர்தி நிலையம்

21. Alarm Time Piece -       அலறிக்கடிகாரம், அலறி, மணி அலறி,அலறி/அதிர் மணிப்பொறி

22. Aluminium Vessel Store -             அளமியக்கலப் பண்டசாலை,அலுமினியப் பாத்திரக் கடை

23. Ambulance -                 மருத்துவ ஊர்தி, உதவுகை ஊர்தி

24. And Sons -                   மற்றும் மகன்கள்

25. Antenna -                     கவர்க் கம்பி

26. Arcade -                       நடைவானப் பந்தல்

27. Arch -                          வில் வளைவு, வளைவு

28. Artisan -                       கைவினைஞர், கைத்திறத் தொழிலாளர், கம்மியர்

29. Artist -                         கலைஞர், கவின் கலைஞர், ஓவியர்

30. Art Prints -                   கலை அச்சீடுகள், கலை அச்சுக்கள், கவின் அச்சுக்கள்

31. Arts -                           கலையகம், கலை, கலைக்கூடம், கலைத்துறை

32. Art Service -                 கலைப் பணி

33. Asbestos -                   கல்நார்

34. Assistant -                   உதவியாளர்

35. Associates -                 கூட்டாளி, பங்காளி, துணைமையர், இணைவோர்

36. Audition -                     கேட்டாய்தல், கேட்டல்

37. Auditor -                       தணிக்கையாளர், கணக்காய்வாளர்


No comments:

Post a Comment