Total Pageviews

Wednesday, March 16, 2011

வணிகர்களுக்கான சொற்பட்டியல்-4

Dry Cleaners   முதல்   Iron Box  வரை

177. Dry Cleaners -             உலர் வெளுப்பாளர், உலர் சலவையகம்

178. Duty Paid Shop -         தீர்வை செலுத்தப்பட்ட பொருள் விற்பனைக் கடை

179. Dye -                          சாயம்

180. Dyeing -                     சாயப்பூச்சு, சாயம் தோய்த்தல்

181. Dye-Stuff -                  சாயப் பொருள்

182. Dye-Works -               சாயத் தொழிலகம்

183. Edible Oil -                 உண் எண்ணெய், சமையல் எண்ணெய்

184. Electricals -                மின்பொருளகம்

185. Electronics -               மின் துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம்

186. Embroidery -               பூத்தையல், தையல் வேலைப்பாடு

187. Emporium -                 மளிகையகம், கலையகம், விற்பனைப் பெருநிலையம், வணிக நடுவம்

188. Emulsion -                  பால்நிறக் குழம்பு, பால்மம், பசைக்குழம்பு

189. Enclave -                    வளாகம்

190. Engineer -                   பொறிஞர், பொறியாளர்

191. Engineering Industries -               பொறியியல் தொழிலகம்

192. Enlarger -                   பெரிதாக்கும் கருவி, விரிக்கி, விரிவாக்கி

193. Enterprises -               முனைவகம், வணிக நடுவம், முயற்சியகம்

194. Essences -                 சாரங்கள், நறுமணச் சாரங்கள், சாறுகள், நறுமணப் பொருள்கள்

195. Ever Silver -                நிலைவெள்ளி, எவர்சில்வர், கறுக்கா வெண்தகடு

196. Exhaust Fan -             உறிஞ்சு விசிறி, காற்றுப்போக்கி

197. Explosive -                  வெடிமருந்து

198. Export -                      ஏற்றுமதி

199. Fabricators -               கட்டமைப்பாளர்

200. Factory -                    தொழில் மனை, தொழிலகம், தொழிற்சாலை

201. Fancy Stores -            புதுமைப் பொருளகம், பல்பொருள் அங்காடி

202. Fan Regulator -           விசிறி கலிங்கு, விசிறி ஒழுங்குபடுத்தி, விசிறி வேக இயக்கி

203. Fashion -                    புதுப்பாணி

204. Fast Food -                 விரைவுணா (உணவு), உடனடி உணவு, விரைவு உணவகம்

205. Fax -                          தொலை எழுதி, தொலை நகல், தொலை நகலி

206. Federation -                ஒன்றாயம், கூட்டமைப்பு

207. Feeds -                      தீனி, தீவனம்

Cattle Feeds -                    கால்நடைத் தீவனம்

Poultry Feeds -                  கோழித் தீவனம்

208. Fibre-Glass-Products - நாரிழை-ஆடி உருவாக்க வினையகம், நாரிழை-ஆடி தயாரிப்புப் பொருள்கள்

209. Fibre Pipes -               நாரிழைக் குழாய்கள்

210. Filter -                        வடிகலம்

211. Filter Cigarette -          வடிமுனை வெண்சுருட்டு

212. Finance -                    நிதியகம், நிதி, குவை, குவையம், பொருளகம்

213. Fire Engine -               தீயணைப்பு எந்திரம், தீயணைப்பு வண்டி, தீயணைப் பொறி

214. Fisheries -                  மீனளம்

215. Fitter -                        பொருத்துநர்

216. Flats -                        அடுக்குமனை, அடுக்கு வீடுகள்

217. Flasks -                      குடுவைகள், சேமச்செப்பு, சேமக்குடுவை

218. Florist -                      பூ விற்போர், மலர் விற்பனையாளர்

219. Floodlight -                 ஒளிவெள்ளம்

220. Flour Mill -                  மாவாலை

221. Fluorescent Lamp -     பாதரச ஆவி விளக்கு, இதன் ஆவிவிளக்கு

222. Fluorescence -            ஒளி வண்ணம், ஒளிர் வண்ணம்

223. Foam Pillow -              நுரையணை, நுரைத் தலையணை

224. Folding Furnitures -     மடக்கு அறைகலன்கள்

225. Footwears -                தாளணிகள், தாளணியகம், மிதியடியகம், காலணியகம், தொடுதோல் அணிகள்

226. Foundation -               நிறுவனம், அடித்தளம்

227. Foundry -                    வார்ப்பாலை, வார்ப்பகம், வார்ப்படச் சாலை, வார்ப்புக் களம்

228. Frame Works -            படச்சட்டப் பணிமனை, படச்சட்டக்கடை

229. Framer -                     படச் சட்டமிடுபவர்

230. Fruit Juices -               பழச்சாறுகள், பழமுதிர்சோலை

231. Furniture Mart -           அறைகலன் அங்காடி, வீட்டு வசதிப் பொருள்கள், அறையமர்வுப் பொருளகம்

232. Garments -                 உடை வகைகள் (ஆடை)

233. Gas -                         எரி ஆவி, எரிவளி

234. Gas Welding -             ஆவிப் பற்றவைப்பு

235. General Stores -          பல்பொருள் அங்காடி

236. Gift House -                பரிசுச் பொருளகம் (இல்லம்)

237. Ginning Factory -        பஞ்சாலை, பஞ்சுப் பிரிப்பகம்

238. Godown -                    கிடங்கு, கிட்டங்கி

239. Gold Refineries -         தங்கத் துவடியாலை, தங்கத்தூய்மை ஆலை, பொன் தூய்மை செய்யுமிடம்

240. Granites -                   கருங்கற்கள், கிரானைட் கற்கள், கருங்கல் சல்லிகள்

241. Graphics -                  எழுத்து வரைகலை

242. Grille Works -             இரும்புக் கிராதிகள், வலைத்தட்டித் தொழிலகம்

243. Grinder -                     திரிகைக்கல், அரைப்பான், இயந்திர ஆட்டுக்கல், அரைக்கும் கருவி

244. Grindery -                   சாணை பிடிக்கும் இடம்

245. Groceries -                 பலசரக்கு

246. Group of Companies -  குழுமத் தொகுதி, வணிக நிறுவனத் தொகுதி

247. Guest House -            விருந்தகம், விருந்தில்லம், விருந்துமனை, விருந்தினர் மாளிகை/இல்லம்

248. Hair Dresser -             முடி திருத்துபவர்

249. Hair Stylist -               முடி ஒப்பனையாளர்

250. Hall -                          மன்றம், கூடம், அரங்கம்

251. Handicrafts -               கைத்திறவினைகள், கைவினைப் பொருள்கள், கைத்திற வினையகம்

252. Handloom -                 கைத்தறி

253. Hardwares -                வன்மாழைகள், வன்மாழையகம், வன்சரக்கு, இரும்புக் கடை, வன்பொருளகம்

254. Hatchery -                  குஞ்சு பொரிப்பகம்

255. Headlight -                  முகப்பு விளக்கு

256. Health Centre -            நல மையம், நல்வாழ்வு நிலையம், நல நடுவம்

257. Hire -                          வாடகை

For Hire -                           வாடகைக்காக/வாடகைக்கு

258. Hi-tech Industries -      உயர்-தொழில்நுட்பத் தொழிலகம் (தொழில் நுட்பம்)

259. Holiday Resort -          விடுமுறை ஒய்வகம்

260. Home -                       அகம், இல்லம், வீடு

261. Home Appliance -        இல்லப் பயன்பொருள்கள், வீட்டுவசதிப் பொருள்

262. Hose-pipes -               நெளிவுக் குழாய்கள்

263. Hosiery -                    உள்ளாடை

264. Hotel -                        உணவகம்

265. House -                      இல்லம், வீடு

266. Housing Developers -   வீட்டு வசதி மேம்பாடு, வீடுகட்டுவோர்

267. Ice-Creams -               பனிக்குழைவு, பனிப்பாலேடு

268. Industrial Corporation - தொழிற் கூட்டிணையம், தொழில் கூட்டு நிறுவனம்

269. Industry -                    தொழிலகம், தொழில்கள்

270. Initial -                        முன்னெழுத்து

271. Institute -                    நிறுவலகம், நிலையம், நிறுவனம்

272. Institution -                 நிறுவனம்

273. Interact Club -             இடைவினை மன்றகம், இணைந்தியங்கு மன்றம், கலந்துரையாடு மன்றம்

274. Interest -                     வட்டி

275. Investment -                முதலீடு

276. Invisible Darning -        தோன்றாத் தையல்

277. Iron Box -                   சலவைப் பெட்டி, தேய்ப்புப் பெட்டி


No comments:

Post a Comment