Total Pageviews

Wednesday, February 16, 2011

ஆட்சிச்சொல்லகராதி

ஆறு பதிப்புகளைக்கண்ட தமிழ்நாட்டு அரசின் ஆட்சிச்சொல்லகராதியின் ஏழாம் பதிப்புக்குரிய பணிகள் தொடங்கப்பெற்றுள.தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்
மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்களைத் தலைவராகவும் தமிழ்வளர்ச்சி இயக்குநர் கூ.வ.எழிலரசு அவர்களை உறுப்பினர்-செயலராகவும் கொண்டமைந்துள்ள இக்குழுவில் முனைவர் வ.செயதேவன்,முனைவர் இரா.மதிவாணன்,முனைவர் இ.மறைமலை,முனைவர் மு.முத்துவேல்,தமிழ்நாட்டு அரசின் மொழிபெயர்ப்புத்துத்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் உறுப்பினர்களாக அமர்த்தப்பெற்றுளர்.முனைவர் இ.மறைமலை தொகுப்பாசிரியராக அமர்த்தப்பெற்றுள்ளார்.
சொல்லாக்கத்தில் மக்களுக்குப் பெரும்பங்கு எப்போதும் உண்டு.
அவ்வகையில் ஆட்சிச்சொல்லகராதியின் சொற்கோவையை வலையேற்றம் செய்ய விழைகிறோம்.
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் அளிக்கப்பெற்றுள்ளன.
நீங்கள் ஏதேனும் புதிய சொல்லை உருவாக்கி அறிமுகம் செய்ய விழைந்தாலோ இருக்கும் சொல்லை மாற்றியமைக்க விரும்பினாலோ உடனேதெரிவிக்கலாம்.ஏற்றுக்கொள்ளப்பாடும் சொற்களை வெளியிடும்போது சொல்லாக்கத்தை வழங்கியவர்களின் பெயர்களையும் வெளியிட எண்ணியுள்ளோம்.
தங்கள் கருத்தறிய விழைகிறோம்.

1 comment:

  1. for the first word we have to give all possible meanings. that should be appropriate for the prefix or suffix to be inserted.
    for each English word we have to find the equivalent in tamil... eg. for contract and agreement /the words coined may be shorter.

    ReplyDelete