Total Pageviews

Wednesday, February 16, 2011

Achievement-- Acumen

Achievement--அருஞ்செயல்,

அருவினை,  சாதனை; முடித்த செயல்

Achromatic - வண்ணம் இல்லாத; நிறம் காட்டாத

Acid - அமிலம்; காடிப் பொருள்

Acid oil - சோப்பு எண்ணெய்

Acid test - கடுந்தேர்வு

Acidimeter - அமிலமானி; காடிமானி

Acknowledgment ஒப்புகை

-Acknowledgment of payee - தொகை பெறுபவர் ஒப்புகை

Acoustic – ஒலி/ஒலி அலைகள் பற்றிய இயற்பியல் துறை; செவிப்புலன் இயைபு

Acquaint - தெரிவி; அறிமுகமாக்கு; பழக்கப்படுத்து

Acquaintance- அறிமுகம்; அறிமுகமாயிருத்தல்

Acquire - அடை; முயன்று பெறு, பற்று

Acquired - முயன்று பெற்ற;

இயல்பாய் அமையப்பெறாத

Acquiescence - தடைச் சொல்லின்றி உடன்படுதல்

Acquisition - கையகப்படுத்துகை

Acquisition reference suit - நிலக் கையகப்படுத்துகை பற்றிய வழக்கு

Acquisitive - கவரும் ஆர்வமுடைய; கைப்பற்றும்ஆர்வமுடைய; பிறர் பொருளை வெஃகுகின்ற

Acquit - விடுவி; குற்றமின்மை; அறிவி; கடனாற்று (கடமை ஆற்று)

Acquittal - குற்ற விடுதலை; கடன் விடுதலை

Acquittance - பற்றொப்பம்

Acquittance register - பற்றொப்பப் பதிவேடு

Acquittance Roll-பற்றொப்பப்பட்டியல்

Acre - ஏக்கர்

Acreage - நிலப் பரப்பளவு (ஏக்கரில்

Acrimonious - எரிச்சலான; காரசாரமான; கடுமையான

Acromatic (Acromatical) - வாய்மொழியான; எழுத்தில் வராததான

Across - குறுக்காக

Act - செயல்; நாடகக் களம்; சட்டம்

Acted in service - பணியிலிருந்தார்

Acting - மாற்றாள் முறைப் பணி

Acting arrangement - தற்காலிக ஏற்பாடு

Acting incumbent - மாற்றாள் முறையில் பணியிடத்தை

வகிப்பவர்

Acting in good faith - நன்னம்பிக்கையுடன் செயலாற்றுதல்

Acting personnel – மாற்றாள், முறைப் பணியாளர்

Acting service - மாற்றாள் பணி

Action - செயல்; நடவடிக்கை

Actionable wrongs - நடவடிக்கை எடுப்பதற்குரிய முறைகேடுகள்

Action Committee, Action Group - நடவடிக்கைக் குழு

 Activate - சுறுசுறுப்பாக்கு; செயலுக்கு ஆட்படுத்து

Active- சுறுசுறுப்பான;செயல்திறமுடைய

Active consideration - தீவிர கவனித்தல்; தீவிர கருதுப்பாட்டில்

Active ingredients - செயல்திறன்; ஆக்கக் கூறுகள்

Active service - பணியிலிருத்தல்

Active support - செயலார்ந்த ஆதரவு; செயல்முறை ஆதரவு

Active Unit - செயல்திறப் பிரிவு

Activity - செயல்; நடவடிக்கை

Actual - உள்ளபடியான; உண்மையான

Actual Balance உள்ளபடியான இருப்பு

-Actual Expenditure - உள்ளபடியான செலவு

Actual Journey time - உள்ளபடியான பயண நேரம்

Actually transported - உள்ளபடியாகக் கொண்டு சென்ற

Actual Receipt - உள்ளபடியான வரவு

Actuate - தூண்டு; ஏவு; உந்து

Act up to - நிறைவேற்று

Acumen - மதிக்கூர்மை; நுழைபுலம்

No comments:

Post a Comment